*வள்ளுவன்!*

*வள்ளுவன்!*

வண்ணம் பூசி-வர்ணம் பேசிட.
வழி வகுப்போர்க்கும் சேர்த்தே தான்..!

சூளுரைத்தான் எம் பாட்டன் வள்ளுவன்..!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”

என்றே -ஈராயிரம் ஆண்டின் முன்னே.!

ஈரடி குறள் வழியே- வையம்

வியந்திடவே வித்திட்டான்..!

இன்னுயிர் யாவுக்கும் சமநெறி உரைத்திடவே.,

பூவுலகில் இவன் பூத்திட்டான்..!

கல் தோன்றி மண்தோன்றா -முன் தோன்றிய “மொழியான்”..!

விண்ணோர்க்கும்-மண்ணோர்க்கும் நெறி சொன்ன
” கவியான்”.!

ஞாலம் முழு ஞானம் காண- குறள் நிலையே
வழி சொன்னான்..!

சமய -நியாயம் ஏதும் பூசாதே சமநிலையிலையே அறி சொன்னான்..!

சங்கம் வளர் தமிழினிலே ..சமத்துவம் மலர் ஏந்தி குறள் வடித்தான் ..!

முக்காலமும் உணர்ந்திடவே முப்பாலில்- வாழ் சொன்னான்..!

இடுக்கண் வருங்கால் நகுக என்றோனின் – இது கால இடுக்கண் கண்டே இமயமும் நகுகிறதோ?

இந்த இதுகால இழியோர் நிலை கண்டே!!

அறநெறி அவர்களுக்கும் – அது வழியே தான்.!

என்றுரைத்தனெ,இவன் குறள் வழியே..!

இனிய மொழி கூறிட்ட குறள் ..இனியாவது இனிக்கட்டுமே.! அந்த இழி மொழியோர்க்கு இணைந்தே!!

 -கவிஞர்  கிருபாகரன்

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *