ரயில் பயணம்

 *ரயில் பயணம்..!*

ராஜ ராகம் எழுப்பியே..
தொடங்கிட்ட ஓர் பயணம்..!

ரக ரக மான மக்களையும் -ரகசிய
காதலையும் சுமந்துக்கிட்டே..!

தொலைதூர தொடர்ந்தாச்சு ஒர் பயணம்..!

ஆச்சாரமும்- ஆல்பர்ட்டும் (அந்தோனி)அருகருகே அமர வைச்ச ஆங்கிலேயன் (அரசு)ஓட்டும் மின்சார சமூகநீதி சாரட்டு..!

அரசியலும் -அன்றாடமும் ,
கலந்த படி கதைகள் பல பேசியே..கடந்திடுதே ஓர் ரயில் பயணம்..!

நெஞ்சுமுட்டும் நெருக்கத்திலும் -பிஞ்சு ஒன்னு பிதுங்கி கொண்டே உள் செல்லவே ஓர் பயணம்..!

ஓரப்பார்வையிலே-ஒய்யார காதல் வழியும் ஓராயிரம் ஒரு தலை காதல்களின் -தலை பயணம்..!

தெவிட்டாது தினந்தோறும் பள்ளிக்கும் ,வேலைக்கும் பயணிப்போரின் ஓர் போர் பயணம்..!

துப்பட்டா பூக்களுக்கும்,துளிர்மீசை நாயகர்களுக்கும் தித்திக்கும் நவரச பயணம்…!

கூன் விழும் காலம் தொட்டும் குளிர் காற்று உயிரை முட்டு ம் தளரா குணாள- உழைப்பாளரின் உயிர்பயணம்..!

சன்னல் ஓரம் சாய்ந்தபடி -சம காமல் நம் கண்முன்னே பின்னே கடந்திடும் ஓர் கவின் பயணம்..!

வேர் பிடிங்கிய செடியாய் ,விதி எண்ணி வாழ்வோரின் -வலிகளின் விளி பயணம்..!

முன் அறியா முகங்களின் – முதல் பார்வை சினேகனங்களுடன் (ஸ்பரிசத்தோடு)தொடர்ந்தவாறே ஓர் பயணம்..!

பரிகார தளங்கள் தேடி படையெடுக்கும் பக்திகளின் பால பயணம்…!

அழுக்கும்- அழகும் அருகருகே அமைய கிடந்த அகிலத்தினை அளந்தவாறே ஓர் பயணம்..!

ஓர் ரயில் பயணம்…. ! சங்கடங்கள் கடந்த படி சாமான்யன் ஒருவனாய்..சந்தித்த சரித்திர பயணம்…தான்…அதுவுமே…!

சில்லரை சரியாய் கொடுத்து சீட்டு வாங்கி ..!

வரிசை கட்டி நின்றபடி இடிபட்டு இடம் பிடித்து இருக்கும் ஊர் ..விட்டு உறவு முகங்கள் பார்த்திட ஊர் செல்லும் ஒவ்வொருவக்கும்..அது ஓர்..அசகாய பயணம் தான்..! எம் மண்ணிலே…!

-கவிஞர்  கிருபாகரன்

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *