ஏனடி என்னை வெறுக்கிறாய்..!

ஏனடி என்னை வெறுக்கிறாய்..!

பார்த்து பார்த்து ரசித்துவிட்டு..
பார்த்தும் பாராமல் இருப்பதேனோ..?

ஓரமாய் ஒளிந்து சிரித்துவிட்டு..
ஒரிரு வாரமாய் நீயும் வெறுப்பதேனோ..?

ஒன்றும் புரியவில்லை எனக்கு..
ஏதோ என் மீது உனக்கு தப்பான கணக்கு..

எளியவன் என்றென்னி இகழ்கிறாயோ..?

ஏமாற்று காரனென விலகுகிறாயோ..?

அல்ல.. எலிசபெத் ராணி உனக்கு ..
எலி நிறக்காரன் இணையில்லை என நினைக்கிறாயோ..?

ஏனடி எனை மெல்கிறாய்..!
தினமும் எனை கொல்கிறாய்..!

என்னுண்டு, எழுத்துண்டு இருந்த என்னை ஏங்க வைத்தவளே..!

கண்களை விழித்தபடியே தூங்க வைத்தவளே..!

இயல்பாய் பேசிய என்னுடன்.. இலித்து பேசியது ஏனோ?

எதார்த்தமாய் பார்த்த என்னை.. ஏங்கி பார்த்தேனோ?

ஏற இறங்க பார்த்தவிட்டு, ஆசையை நெஞ்சில் வார்த்துட்டு..

என்னுள் நேசம் வரும்போது வேறொருவனுடன் யாசிக்கிறாயே..

இதுதான் உன் காதலோ? இல்லை எனக்கு உன் மேல் பிடித்த பேதலோ?

-கவிஞர் ராதாபுரம் ஸ்ரீதர்

Spread the love

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *