மதிய உணவு மகிழ்வகம்

மதிய உணவு மகிழ்வகம்

நாகரீக நண்பர் கூட்டம் நடையா நடக்குதே..

நாலு அஞ்சு நாற்காலி புடிக்க நாலா பக்கமும் சுத்துதே..

நாவில் எச்சில் சுரந்த படி.. நகர்ந்து நகர்ந்து செல்லுதே…

மதிய உணவு உண்ணக் கூட்டம் மணிக்கணக்கா நிற்குதே…

மல்லுக்கட்டிய நண்பர் கூட்டம் மாறி மாறி பார்க்குதே…

மச்சி என்ற கூக்குரல் எங்கேயோ கேட்குதே..

அட டா..மேசை என மனம் மகிழ்ச்சியில் பூத்ததே..

ஆரம்பத்தில் அமைதியாய் அன்னம் எடுத்த கைகளோ..

அடுத்த நொடி நொறுக்கு தீனீ தேடுதே..

அமைதியாய் அரம்பித்த அரசல் புரசல் செய்திகள் அரசியல் வரை சென்றதே..

அற்புதமென சென்ற உரையில்..

சில சில சல சலப்புகள்..

சரி சரி என வேறு உரை அதிலும் அடிதடி..

என்ன என்று சொல்வது எங்கள் மகிழ்வகத்தின் மகத்துவத்தை…

-கவிஞர் ராதாபுரம் ஸ்ரீதர்

Spread the love

4 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *