நாகரிக சாபம்

நாகரிக சாபம்

காட்டை அழித்து நாட்டை உருவாக்கிய
கலியுக மனிதா..
கருவேல மரத்தை மட்டும் மறந்தது ஏனோ?

மஞ்சள் பூசி மகிழ்ந்த பெண்கள்..
மருந்து பூசி மனப்பதேனோ?

பனஞ்சாறு தென்னஞ்சாறு பருகிய மானுடா..
பன்னாட்டு பானங்கள் பருகுவதேனோ?

பசுமை போர்த்தி படரும் பூமியில்
பாஸ்பரசும் , பொட்டாசியமும் தெளிப்பதேனோ?

அறுஞ்சுவை அறிந்திட்ட மனிதா..
அவசர உணவு உண்பதேனோ?

உணவை மறுந்தாக்கியவனே..
மருந்தை உணவாக்கியவதேனோ?

பாலாறு, தேனாறு ஓடிய மண்ணில்
மணல் லாரி ஓடும் கொடுமை ஏனோ?

உலகிற்கே உழவை கற்று கொடுத்த நாட்டில்
உழவனுக்கு அவமானம் ஏனோ?

அறிவியல், நாகரீக வளர்ச்சி என கருதி மதியில்லா மாந்தர் கூட்டம் அழியப்போகும் எச்சரிக்கை ஒலி தானோ?

சுயநலக்காரர்களின் சூழ்ச்சமத்தால்
சூழ்ந்தவர்கள் அழிந்திடும் சாபக்கேடு?

-கவிஞர் ராதாபுரம் ஸ்ரீதர்

Spread the love

6 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *