தளபதி-விஜய்

அனைத்து திறமைகள் அளவின்று இருந்தும்..!
அகம்பாவம் சிறிதும் இலாதவன் நீ..!
உனை எதிர்பவர்களுக்கு உன் சிரிப்பே அழகு தீ..!

உன் கலைகள் இவ்வுலகிற்கு கிடைத்த வரம்..!
உனக்கு எப்போதும் உண்டு இளைஞர்களின் கரம்..!
உனை பாரட்ட தாழ்கிறது என் சிரம்..!

கோடியில் ரசிகர்களை பெற்ற கோமகன் நீ..!
குயிலென குரலினை பெற்ற இசையின் குலமகன் நீ..!
கலைகளை கடலென கொண்ட கலைச்செல்வியின் இளையவன் நீ..!

உன் புகழிற்கு இல்லை எல்லை..!
இவை அனைத்தும் என் தளபதிக்கு நாங்கள் தரும் அன்பு தொல்லை..!

என்றும் உங்கள் நெஞ்சில் குடியிருக்கும் …!

-கவிஞர் ராதாபுரம் ஸ்ரீதர்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *